திருமங்கலம்: சர்ச்களில் தவக்கால வழிபாடு தொடங்கியது. ஏராளமான சபை மக்கள் பங்கேற்றனர். திருமங்கலம் சி.எஸ்.ஐ., நல்ல மேய்ப்பர் சர்ச், சி.எஸ்.ஐ., அற்புதநாதர் சர்ச், அமல அன்னை சர்ச்சில் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் வழிபாடுகள் நடந்தன. திருவிருந்து, ஆராதனைகள் நடந்தன. ஆர்.சி., சர்ச்சில் பங்குத்தந்தை சபை மக்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ., நல்ல மேய்ப்பர் ஆலயத்தில் சபை குரு ரஞ்சன் கனகமணி சிறப்பு வழிபாடு, திருவிருந்து ஆராதனை நடத்தினார்.