பதிவு செய்த நாள்
04
மார்
2017
12:03
சென்னை: காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ருத்ர ஜப வேள்வி, உபநயனம், விளக்கு பூஜை என, இரண்டு நாள் விழா, தாம்பரத்தில் இன்று துவங்குகிறது. காஞ்சி சங்கர மடத்தின் சேவை அமைப்பான, ஜன கல்யாண் சார்பில், இரண்டு நாள் விழா, தாம்பரம் - வேளச்சேரி சாலையில் உள்ள, சங்கர வித்யாலயா பள்ளியில் நடக்கிறது. இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கும் இவ்விழாவில் ருத்ர ஜப வேள்வி, வள்ளலார், தேவாரம், திருவாசகம், விஷ்ணு சகஸ்ரநாய பாராயணம் நடக்கிறது. மாலை, 4:15 மணிக்கு, மெகா திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, ஜன கல்யாண ஆண்டு விழா நடக்கிறது. இதில், காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்று, அருளாசி வழங்குகிறார். நாளை நடக்கும் விழாவில், மகா பெரியவரின் பாதுகை அபிஷேகம், கோ பூஜை, உபநயனம் நடக்கிறது. இறுதி நிகழ்வாக, கல்யாணபுரம் விஜயராகவனின் சங்கீத உபன்யாசம் நடக்கிறது.