பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
பவானி: பவானி அருகே, நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பவானியை அடுத்து கவுந்தப்பாடி, சந்தைப்பேட்டையில் நவசக்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷக விழா கடந்த, 3ல், காலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அன்று காலை, 10:00 மணிக்கு, வாணியாற்றிலிருந்து தீர்த்தக் குடம், சீர் கூடை, முளைப்பாலிகை கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்கியது. நேற்று காலை, 6:00 மணியளவில், கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.