பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், மாகாளியம்மன் திருவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. மாகாளியம்மன் கோவிலில் அதிகாலை முதல், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து, ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்மனுக்கு பக்தர்கள் பூஜை கொடுத்து, காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். மாலை, 3:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜையுடன், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கிராம தலைவர் பெள்ளா கவுடர் முன்னிலையில், விழாக் குழுவினர், இளைஞர்கள், மகளிர் குழுவினர் உட்பட, பொதுமக்கள் செய்திருந்தனர்.