பதிவு செய்த நாள்
11
மார்
2017
12:03
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், திம்மநாய்க்கன்பட்டி அடுத்த வேப்பிலைக்குட்டையில் சக்தி முருகன் சித்தர் பீடம் கோவில் அமைந்துள்ளது. இதில், 41 அடி உயரத்தில் எட்டுக்கை அம்மன், 42 அடி உயரம் முருக பெருமான், 28 அடி உயரத்தில் கால பைரவர், பெருமாள், சிவன் ஆகிய சுவாமி சிலைகள் உள்ளன. இங்கு, செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று, இக்கோவிலில் மழை வேண்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. வருண பகவான் மந்திரங்களுடன் நடந்த இந்த பூஜையை, ஓம் சக்தி முருகேசன் செய்து வைத்தார். இந்த சிறப்பு யாகத்தில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.