Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகத்தில் பிறந்தவரா நீங்கள்...! அந்தணர்கள் அரிசி விற்கக் கூடாது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
செய்யும் தொழிலே தெய்வம்! (மகான் அன்னை)
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
05:03

*வேலை செய்வது பிரார்த்தனையாக இருக்கட்டும். ஏன் என்றால் வேலை ஒன்றே, கடவுளுக்குச் செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கை.
*வாழ்வில் எந்த நிலையிலும் நேர்மை தவறாதீர்கள். நேர்மையான மனம் உடையவர்களுக்கு, மகிழ்ச்சி என்னும்  பரிசை கடவுள் நிரந்தரமாகத் தந்து விடுவார்.
*பிறரது விஷயத்தில்  புதிய மாறுதல் உண்டாக்க விரும்பினால், அந்த மாற்றம்
உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும். எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது.
*ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக மதிப்பது நம் கடமை. இதில் நமது சுயவிருப்பத்திற்கோ, எதிர்பார்ப்புக்கோ சிறிதும் இடமில்லை. *உண்மை, நேர்மை ஆகிய இரு பண்புகளும் மனத்துõய்மைக்கு மிகவும் அவசியம். மனத்துõய்மையின்றி கடவுளை வழிபட்டு பயனில்லை.
*பேசாமல் அமைதியுடன் இருக்கப் பழகி விட்டால் பிரச்னைகளை வாழ்வில் தவிர்த்து விடலாம். எப்போதும் அமைதி காத்து மனவலிமையுடன் இருக்கப் பழகுங்கள்.
*கீழான வேலை என்று எதுவும் இல்லை. வேலையை எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டால் எல்லா வேலையும் நல்ல வேலை தான்!
*நாம் பெற்றிருக்கும் அறிவு கடவுளிடம் இருந்தே வரப் பெற்றது. கடவுளின்
படைப்பான இயற்கையில் இருந்தும், அவருடைய படைப்புகளில் இருந்துமே
மனித குலம் எல்லா அறிவையும் பெற்றுக் கொண்டது.
*எந்த உணர்ச்சியையும் அடக்கி வைக்காதீர்கள். கோபம், ஆசை ஆகிய உணர்ச்சிகளை அடக்கினால், அது முன்னிலும் பல மடங்கு ஆவேசத்துடன் எழுவதைக் காணலாம்.
*உண்மையான அறிவைப் பெற வளைந்து கொடுக்கும் பண்பு  வேண்டும். வளைந்து கொடுக்கிற மனம் முன்னேற்றத்திற்கான முயற்சியில் பின்னடைவு காண்பதில்லை.
*வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். எது வந்தாலும் மன வருத்தம்  வேண்டாம். பொறுமையோடு வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.
*காலத்தை மதியுங்கள். உடனடியாக இப்போதே நற்செயல்களில் ஈடுபடுங்கள். வளர்ச்சி எதுவும் இல்லாமல் வீணாகக் காலத்தைக் கழித்தால், அதற்காக பிற்காலத்தில் வருந்த நேரிடும்.
*யாரும் உலகில் தனியாளாக இல்லை. எப்போதும் கடவுள் நம்முடன் இருக்கிறார். அவர் மீது முழு நம்பிக்கை வைத்து பணியாற்றுங்கள்.
*சாப்பாட்டில் அமரும் முன் முதலில் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். சாதிக்கும் வல்லமையும், ஊக்கமும் அந்த உணவின் மூலம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம்  வேண்டிக் கொள்ளுங்கள்.
*மற்றவர் மகிழ்ச்சியடையும் போது மகிழ்வதும், பிறர் துயரம் கண்டு வருந்துவதுமே இரக்க குணம் படைத்தவர்களின் தனிச் சிறப்பு.
*எந்த ஒரு விஷயத்தையும் அமைதியுடன் அணுகுவதே வலிமையின் அடையாளம். பலவீனமான மனம் கொண்டவனே எப்போதும் கடுகடு’ என்று முகத்தை
வைத்திருப்பான்.
*முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,  தற்புகழ்ச்சியை கைவிடுங்கள். ஏனெனில் இது உங்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
*எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுள் மீது  பக்தி செலுத்துவதே சிறந்தது. இதுவே  மேலான மகிழ்ச்சியைத் தரும்.
*தவறை உணர்ந்து மனம்  வருந்தினால் அதற்கான மன்னிப்பு நிச்சயம். அதை
மறைக்கவோ, மறுக்கவோ செய்வது மேலும் அதைப் பெரிதாக்கி விடும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar