தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தினைச் சொல்லி பகவானை வேண்டுவது, எல்லா நற்பலன்களையும் தரும் என்பது பீஷ்மர் சொன்ன வாக்கு. அதேசமயம் ஒவ்வொரு நாளும் திருமாலின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்ல நேரம் இல்லாதவர்கள், அவனது மிகமிக முக்கியமான பன்னிரு திருநாமங்களை மட்டுமாவது சொன்னால், சகஸ்ரநாமங்களையும் சொன்ன பலன் கிட்டும் என்பது அடியவர்கள் தம் திருவாக்கு.