நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது குறுமாணக்குடி. சாபத்தின் காரணமாக, தன்மேனி முழுவதும் ஆயிரம் கண்கள் தோன்றியதால் பெரிதும் வருந்திய இந்திரன், சாப விமோசனம் வேண்டி தவம்செய்த தலம் இது. அவனது தவத்தால் மகிழ்ந்து, ஆயிரம் கண்களையும் தன் திருமேனியில் ஏற்றுக்கொண்டு அருள்பாலித்தவர் என்பதால், இந்தத் தலத்தின் இறைவனுக்கு கண்ணாயிரமுடையார் என்று திருப்பெயர்.