கீழக்கரை, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் 12ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. அதிகாலை 5 மணிக்கு அஷ்டாபிஷேகம், உலக நன்மைக்கான வேள்வி, வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆன்மிகச்சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி மோகன், வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.