Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கை தீர்த்தம் விற்பனை:தினமலர் ... பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தர விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
12:03

திருத்தணி: சுந்தர விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் உட்புறப்பாடு நேற்று நடந்தது. திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அடுத்த, நான்காவது நாளில் சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது. அந்த வகையில், நேற்று மாலை, சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில், உற்சவர் சுந்தர விநாயகருக்கும் சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாக உட்புறத்தில் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள, நாவல்லியம்மன் கோவில் வளாக விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்படடது. இதேபோல், அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் வரசித்தி விநாயகர், திருவள்ளூர் சாலை விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar