திருவாடானை;தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கங்கா தீர்த்தம் விற்பனை துவங்கியது.திருவாடானை தபால் அலுவலகத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. 500, 200 மில்லி கங்கை நீர் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கபட்டது. 500 மில்லி 22 ரூபாய் க்கும், 200 மில்லி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யபட்டது. கங்கை நீர் வீட்டில் இருந்தால் அதன் பயன்கள், தீர்த்தமாக பருகினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிவாச்சாரியார்கள் விளக்கம் அளித்தனர். இதனால் அமோக விற்பனை ஆனது. இருப்பு வைக்கபட்ட அனைத்து பாட்டில்க ளும் விற்பனையானதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏராளமானோர் தீர்த்தம் வாங்க சென்று கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதல் கங்கா தீர்த்தம் பாட்டில்கள், ராமநாதபுரம் தலைமை அலுவலகத்திலிருந்து வரவழக்கப்பட்டு மீண்டும் விற்பனை துவங்கியது.