கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையொட்டி அதிகாலையில் இருந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு சன்னதிகளில் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் செந்தில்குமார், கிராம கமிட்டி உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயப்பாண்டியன், ஓ.ஆர்.நாராயணன், மொட்டையாண்டி உட்பட பலர் செய்திருந்தனர்.