Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபிஷேகத்துக்கு எவர்சில்வர் ... கொலுவிருத்தல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கீதை அமுதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2017
12:03

மனித இன வாழ்க்கை தத்துவத்தின் உயிர்நாடி பகவத் கீதை. தனிநபர் நலன் முதல் உலகின் அமைதி மலர மனிதன் மேற்கொள்ளும் பணியில் அடிக்கு அடி வழிகாட்டுதலாக நின்று வழிநடத்தும் ஆன்மீக ஒளி விளக்கு பகவத்கீதை.

உலகம் உண்ட பெருவாயனான பகவான் கண்ணனெம்பெருமான் பார்த்தனை நிமித்தமாகக் கொண்டு போதிக்கப்பட்ட நீதி நூல் பகவத்கீதை. ஆகவே பகவத்கீதை ஒரு சமய நூல் அன்று, சகல மனித இன வாழ்வியல் வேதம், கீதை மனித  இன நடைமுறை வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தி வாழ்வின் குறிக்கோளை எட்டுவதற்கு உண்மையான, இனிதான வழியினைக் காட்டுகிறது. கீதையை ஆழ்ந்து நோக்கினால் தினசரி நடைமுறை வாழ்வில் எதிர்கொள்ளும் அனேக பிரச்சனைகளுக்கு பதிலும், தீர்வும் காணப்படும். எனவே இதனை கீதை அமுதம் என்பர் பெரியோர்.

கீதையில் முதலாவது விஷாதயோகம், இறுதியானது மோக்ஷ சன்யாச யோகம். விஷாதத்தில் தொடங்கின மானிட வாழ்க்கை பகவானுடைய இன்னருளினால் இறுதியில் மோக்ஷத்திலும் இச்சையில்லாத சுத்த ஞானம், சுத்த சத்வம், நிஷ்காம்ய நிலைக்கு இட்டுச் செல்லும், இதுவே ஜீவன் முக்தி (வாழும் பொழுதே எப்பற்றும் இல்லாது நித்தியம் ஆனந்தமாக, சுகமாக இருக்கும் நிலை), கீதை எந்தவிதமான சாதிமதத்தை நிறுவவில்லை. மானிடர்கள் அனைவரையும் எப்பெருமான் சந்நிதிக்கு சேர்க்கும் ஆன்மீக சமயத்தை மட்டுமே கீதை நிறுவியுள்ளது. தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆச்ரம தர்மங்களோடு பகவானை அர்ச்சித்தால் போதும் தூய சித்தம் ஏற்படும். அதனால் பலத்தை எதிர்பாராத கர்மயோகம் கைகூடும். இதன் மூலம் அப்பழுக்கற்ற ஞானம், பக்தி ஏற்படும். மேலும் மோக்ஷம் சித்திக்கும், இதுவே கீதையின் சாரம்.

ஈச்வரார்ப்பண புத்தியோடு பண்ணும் கர்மங்கள் தவிர - மற்ற கர்மங்கள் யாவும் உறவுக்கு காரணமாகின்றன என்பதை அறிந்து அனுட்டிப்பதே முக்திக்கு மார்கமாகின்றது என்கிறது கீதை.

இயற்கையோடு இருந்து இயற்கைக்கு ஏற்ப எங்ஙனம் வாழ முடியும் என்பதை போதிப்பது கீதை. யோகமென்பது செய்யும் நற்கர்மங்கள் யாவும் கற்பித்தலோடு செய்வது என்னும் புதிய விளக்கம் கூறியது கீதை. பணியைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது கீதை. அதுவே பகவானுக்கு பிடித்த செயல்.

நவீன வாழ்க்கை முறையில் நலிந்து விஷாத யோகத்தை அனுபவித்து வருகின்ற இன்றைய இளைஞர்களுக்கு பகவத்கீதை ஒரு சரியான தீர்வு. இந்திரியங்களை மனதை, புத்தியை ஒருமுகப்படுத்தி மனஉளச்சலை தவிர்த்து மனசாந்தியை உண்டுபண்ணும் மனோவியல் நூல் - கீதை. வாழ்வின் தர்மமாக கர்மாவை அனுட்டிப்பது எப்படி என்பதை கற்பிக்கும் ஒரு சிறந்த திட்டம் கீதை. படைப்பில் உள்ள எப்படைப்பும் போதிப்பது பரமார்த்தம் - பரமாத்மாவின் தத்துவமே! பிரஸ்தான த்ரயத்தில் உள்ள உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரங்கள் உயர்நிலையினைச் சார்ந்தவருக்கு மட்டுமே! ஆனால் பகவத்கீதை சாதாரண மக்களுக்கும் கற்பக மரம் போன்றது.

இன்றைய வாழ்க்கை நிலை முழுமையாக இயந்திரமயமாகிவிட்டது. கடிகாரத்திற்கு இனணயாக மக்கள் ஓடிக் கொண்டுள்ளனர். யாருடைய முகத்தைப் பார்த்தாலும் குறிப்பாக இளைய தலைமுறையை கவனித்தால் ஏதோ ஒரு கவலை, சோகம், அலைச்சல், பொறுமையின்மை, நிராசை காணப்படுகிறது. ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி அலுத்து இருக்கும் மானிடனுக்கு புத்துணர்ச்சி, தைரியம், உற்சாகம் அளிக்கவல்ல திவ்ய ஔடதம் கீதை!

கீதையை காதால் கேட்போம்! வாயால் மனனம் பண்ணுவோம்!! மனதால் தியானம் செய்வோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar