சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ளது சிறுவயல் பொன்னழகி அம்மன் திருக்கோயில். சக்திவாய்ந்த இந்த அம்மன் திருமண அனுக்ரஹம் செய்வதில் மிகவும் வரப்ரசாதி. பவுர்ணமி அன்று அம்மனைத் தரிசித்து வந்தால் கண்டிப்பாகக் குழந்தைப் பேறு கிடைக்கும். 1890ம் ஆண்டு அரசு உயர் அதிகாரி ஒருவர் இக்கோயிலுக்கு வந்தபோது கோயில் தர்க்கார், தண்ணீரில் விளக்கெரியச் செய்பவள் எங்கள் அம்பாள் என்று கூறினார். அரசு அதிகாரி அதை நிரூபித்துக் காட்டச் சொல்ல, புது அகல்களில் நீரை ஊற்றி, திரி போட்டு விளக்கேற்ற, தீபம் பிரகாசமாய் சுடர் விட்டு எரிந்தது. இதனால் அம்பாளின் கருணையும் வெளிப்பட்டது, அன்பரின் வாக்கும் மெய்யானது.