கடலுார்: கடலுார் முதுநகர், காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 10ம் தேதி இரவு கிண்ணித்தேர் உற்சவம் நடக்கிறது. கடலுார் முதுநகர், காமாட்சி அம்மன் கோவிலில் கிண்ணித்தேர் பிரம்மோற்சவம் வரும் ஏப்ரல் 1ம் தேதி மாலை விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான கிண்ணித்தேர் உற்சவம் வரும் 10ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை சுப்ரமணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் கிண்ணித் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து நள்ளிரவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11ம் தேதி இரவு தேரடி உற்சவமும், 12ம் தேதி அபிஷேக ஆராதனையும், 13ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 14ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.