பதிவு செய்த நாள்
24
மார்
2017
01:03
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், கடம்பாடி மாரி சின்னம்மன் ஆகிய கோவில்களின் உண்டியல்களில், 4.63 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. இக்கோவில்களில், கடந்த ஆண்டு டிச., 28ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கையை கணக்கிடுவதற்காக, நேற்று முன்தினம் அவை திறக்கப்பட்டன. துணை ஆணையர் தனபாலன், ஆய்வாளர் கலைச்செல்வி, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டன. ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 1,34,382 ரூபாய்; மாரி சின்னம்மன் கோவிலில், 3,29,510 ரூபாய் என, காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.