அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தெ. மேட்டுப்பட்டியில் உச்சிமகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா நடந்தது. நேற்று முன் தினம் இரவு சுமங்கலி பூஜையுடன் திருவிளக்கு பூஜை நடந்தது. அதனையடுத்து கோயில் விழாக்குழுவினர் உட்பட விரதமிருந்த பெண்கள் முளைப்பாரி மற்றும் அம்மன் கரகம் துாக்கி ஊர் சுற்றி கோயில் கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், சக்தி கெடா வெட்டுதல் உட்பட நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அம்மன் பாதம் துாக்கி வருதல் உட்பட பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராமிய கலை நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.