Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தபுராணம் அரங்கேறிய தலம்! உண்மையை மறைக்காதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் பொன்னானது கடமை கண்ணானது: சொல்கிறார் அமிர்தானந்தமயி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
05:04

இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால், இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. கிடைக்கும் நேரத்தில் உங்கள் கடமையை சரி வர செய்யுங்கள். சுமண்ணில் நட்ட விதை பயிராக வளரும் என்ற நம்பிக்கை இருப்பது போல, கடவுளையும் நம்பிக்கையுடன் வணங்கினால் எதிர்கால வாழ்வு நன்மையாக அமையும். சுபிறரை வணங்குவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக, நம் ஆணவ எண்ணம் குறையும்.சுகருவறையில் கடவுளைக் காண்பதால் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மையான பக்தி. சுயநலத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால், கடவுள் ஆயிரம் அடி விலகிச் சென்று விடுவார். கிணற்றில் விழ ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால், அங்கிருந்து எழுந்து வர பல மணி நேரம் போராட வேண்டியிருக்கும். ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே. பாயும் நீரை ஓரிடத்தில் அணையில் தேக்கினால் விவசாயம் செய்யலாம். அது போல சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளின் அருளைப் பெறலாம். நமது வாழ்வை ஆக்கவழியில் பயன்படுத்தாமல், அழிவு வழியில் பயன்படுத்தினால் ஏற்படும் துன்பத்திற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார்.  இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைக் காக்கும் ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.  சாஸ்திரத்தை படிப்பதால் பயனில்லை. அதைப் பின்பற்ற வேண்டும். வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டிட வரை படத்தில் யாரும் குடியிருக்க முடியாது. ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும். பக்தி மட்டும் நிலைக்கும். புயலில் மரம் சாயும். கட்டிடங்கள் இடிந்து போகும். ஆனால், புல் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்ளும். இந்தப்பணிவை புல்லிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.  கரும்பின் சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையை எறிவது போல, நண்பர்களிடம்  உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு தீமையைத் தள்ளி விடுங்கள். வரைபடம் இருப்பவனுக்கு வாகனப்பயணம் சுலபமாகும்.  தர்ம சாஸ்திரங்களின் உதவி இருந்தால் வாழ்க்கைப் பயணம் எளிதாகும். கடவுளின் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் பாவம் தொலையும். மனம் சுத்தமாகும். வலை பின்னும் சிலந்தி போல எங்கிருந்தாலும் மனதால் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar