Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா ... கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் கொடியேற்றம் கொல்லங்குடி வெட்டுடையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜரின் 1,000வது ஆண்டுவிழா - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் உபன்யாசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜரின் 1,000வது ஆண்டுவிழா - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
05:04

புதுச்சேரி: புதுச்சேரி ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு சார்பில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் தொடர் உபன்யாசம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.  விஞ்ஞானமும், மெய்ஞானமும் என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் நேற்று உபன்யாசம் செய்து பேசியதாவது: விஞ்ஞானம் என்பது உலகவியல். இதனை சோதனை சாலையில் நிரூபித்து விடலாம். மெய்ஞானம் என்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. சோதனை சாலைகளுக்கு இடமில்லை. மெய்ஞானம் வேதத்தை மூலமாக கொண்டது. விஞ்ஞான ரீதியாக மெய்ஞானத்தை நிரூபிக்க முடியாது. அறிவு என்பது நம்மிடம் உள்ள கை, கால், காது, மூக்கு போன்றதொரு கருவியாகும். கை, கால்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோல், அறிவையும் கருவியாகவே பயன்படுத்துகிறோம்.

விஞ்ஞானத்திற்கு, ஞானம் தான் அடிப்படை. ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் அன்பை, கண்ணாடி குடுவையில் காண்பித்து விட முடியாது. அது போல், மெய்ஞானத்தை ஆய்வுக்கூடத்தில் நிரூபிக்க முடியாது. மெய்ஞானத்தை சாஸ்திரத்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மெய் என்பதற்கு மற்றொருமொறு பொருள் உண்மை. மெய்ஞானம் என்பது உண்மையை பற்றியது. விஞ்ஞானம் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறுதலுக்குட்பட்டது. ஆனால், மெய்ஞானம் என்பது மாறுதலுக்குட்படாமல், அறிவு, ஆத்மா, பரமாத்மாவை பற்றி பேச கூடியது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு அடிப்படையாக இருப்பது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் தான். இவைகள் இல்லாம் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை. விஞ்ஞானத்திற்கு அடிப்படையாக இருக்கூடிய பஞ்ச பூதங்களை பற்றி தான் மெய்ஞானம் கூறுகிறது. பஞ்ச பூதங்கள் என்றைக்கும் மாறாது. மாறாமல் இருப்பது தான் மெய்ஞானம்.

மெய் என்றால் உடல், ஞானம் என்றால் அறிவு. மெய்ஞானம் என்றால், உடலை பற்றிய அறிவு. மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என விஞ்ஞானம் கூறுகிறது. இதை மெய்ஞானத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. உடம்பு சுகத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் விஞ்ஞானம். ஆத்மாவிற்கு சுகத்தை தருவது தான் மெய்ஞானம். முரண்பட்ட கருத்துக்களை மெய்ஞானம் பேசாது. விஞ்ஞான ரீதியாக மெய்ஞானத்தை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதன் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் பயன்படுமானால் ஏற்றுக்கொள்ள வேண்டும். உடம்புக்கு மட்டும் மகிழ்ச்சியை கொடுப்பது விஞ்ஞானம். தேவையே இல்லாமலாக்கி, திருப்தியை கொடுப்பது மெய்ஞானம். விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள் தொடரட்டும். அது அனைத்து ஜீவராசிகளுக்கும் பயன்படுமானதாக இருக்கட்டும். இதில், எது மெய்ஞானத்திற்கு தேவைப்படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்வோம். மெய்ஞானத்தை அடைய ராமாநுஜரின் திருவடியை பற்றி வாழ்வோம். இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் உபன்யாசம் -  video

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
அயோத்தி, விஜயதசமியை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், ஆன்மிகச் ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar