பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
01:04
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலுக்கு செல்ல, 428 படிகள், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல, சாலை வசதி உள்ளது. அங்கு, பங்குனி உத்திர தேர்த்திருவிழாவுக்கு, கடந்த, 1ல், கொடியேற்றம் நடந்தது. நேற்று, மூலவர் பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 9ல், பங்குனி உத்திரத்தையொட்டி, அதிகாலை, 2:00 மணியளவில், மூலவருக்கு, பால் அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை நடக்கும். மாலை, 3:30 மணியளவில், தேரோட்டம் நடக்கும்.