பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
01:04
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், களரம்பட்டி, வடக்குக்காடு சுப்ரமணி கோவிலில், வரும், 9ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக, 7 காலை, 9:00 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. 9 அன்று அதிகாலை, 4:00 மணிக்கு யாக பூஜை, 5:00 மணிக்கு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். 10:00 மணிக்கு காவடி ஆட்டத்துடன் ஊர்வலம், மதியம், 3:00 மணிக்கு செல்வகணபதி, சுப்ரமணிய, வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.