மழை வேண்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை பாப்பாரப்பட்டி: மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், பல்லூர் பேட்டை பாப்பாரப்பட்டி ஆறுமுகசாமி தேவஸ்தானம் என்ற புதிய சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரை, சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பினர், திருத்தொண்டர்கள் சபையினர் பங்கேற்று, மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.