நைவேத்யத்தை வீட்டில் சமைத்து கோயிலுக்கு எடுத்துச் செல்லலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2017 02:04
கோயில் மடப்பள்ளியில் சமைப்பதே உசிதமானது. இதற்கென சில சம்பிரதாயங்களும் உண்டு. அடுப்பில் எரியும் அக்னி கூட, வேள்வி சம்பந்தமுடையதாக இருக்க வேண்டும். இன்னும் சில பெரிய திருக்கோயில்களில் மடப்பள்ளியில் யாக குண்டம் ஒன்று இருக்கும். அதிலிருந்து அக்னி எடுத்து தீ மூட்டி அதில் சமைத்து நைவேத்யம் தயாரிப்பார்கள். பரிசாரகர்கள் என்று அழைக்கப்படும் தகுதி வாய்ந்த சமையல்காரர்கள் ஆசாரத்துடன் சமைத்து நைவேத்யத்தை சந்நிதிக்கு எடுத்து வர வேண்டும். இப்படி எடுத்து வரும்போது மங்கள வாத்தியம், குடை, தீவர்த்தி உடன் வரும். இதற்கென மன்னர்கள் நிவந்தம் அளித்த கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பரிசாகரர் கிடைப்பது அரிதாகி விட்டது. ஒரே அர்ச்சகர், கோயில் பணி முழுவதையும் செய்ய நேர்வதால், வீட்டிலேயே நைவேத்யம் தயாரிக்கும் சூழல் உண்டாகி விட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், சுவாமிக்கு நைவேத்யமானால் போதும் என்ற நிலையில், அர்ச்சகர் வீட்டில் தயாரித்து நைவேத்யம் செய்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.