பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
01:04
அவிநாசி:அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேற வேண்டி, நேற்று தீர்த்த யாத்திரை நடந்தது.திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, கிராமத்தினர் நேற்று காலை
மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் ஒன்று கூடி, சிறப்பு பூஜை செய்து, தீர்த்தம் சேகரித்தனர். அதன்பின், ஊர்வாரியாக இந்த தீர்த்தம் மேள தாளத்துடன் கொண்டு செல்லப்பட்டது.அந்தந்த ஊர்களில் உள்ள விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களில் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. போராட்ட குழுவினர் கூறுகையில்,
"அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை அரசு நிறைவேற்றி, இப்பகுதி கிராமங்களுக்கு அத்திட்டத்தில் தண்ணீர் வந்து சேரும் வரை இந்த தீர்த்த நடத்தப்படும், என்றனர்.