மஞ்சூர் : மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, நேற்று காலை 10.30 மணியளவில், அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு, கிருஷ்ணானந்தாஜி மற்றும் ஸ்ரீ அனந்தமஹமாஹி அம்மா ஆகியோர் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 5.00 மணியளவில், சுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ தேவசேனை, ஸ்ரீ வள்ளியுடன் திருவீதி உலா, யாக பூஜை, சர்வசாதகம் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணானந்தாஜி மற்றும் பக்தர்கள் மேற்கொண்டனர்.