பதிவு செய்த நாள்
07
நவ
2011
11:11
ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலடா கீழ் அப்புக்கோடு ஸ்ரீ ஆனந்தமலை முருகன் கோவிலில், வரும் 11ம் தேதி கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 10.00 மணியளவில் சித்தி செல்வவிநாயகர், ஸ்ரீஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கின்றன. 10.30 முதல், குருத்துக்குளி நன்மணி லட்சுமணன் குழுவினரின் இன்னிசை பஜனை, தஞ்சை ஆனந்த சித்தரின் அருளுரை, ஆருகுச்சி ஓய்வு ஆசிரியர் பெள்ளனின் ஆன்மீக சொற்பொழிவு, ஊட்டி அமுதா குழுவினரின் கலச்சார நடனம், மதியம் 2.00 மணியளவில் அன்னதானம் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.