பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
01:04
சேலம்: தேவாலயங்களில், ஈஸ்டர் பண்டிகையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஈஸ்டர் பண்டிகையொட்டி, சேலம் மாவட்ட தேவாலயங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் துவங்கின. சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில், ஆயர் கிரகோரிராஜன், அஸ்தம்பட்டி இம்மானுவேல் தேவாலயத்தில், ஆயர் அகிலன், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், ஆயர் மில்லர் ஜெயபால், கோட்டை லெக்லர் சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், ஆயர் விக்டர்ராஜ் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, வழிபாடுகள் நடந்தன. மேலும், ஜான்சன்பேட்டை அந்தோணியார், சூரமங்கலம் செயின்ட் ஜோசப், செவ்வாய்ப்பேட்டை ஜெயராகினி உள்பட, சேலம் மாநகர், புறநகரில் உள்ள, 83 தேவாலயங்களில், நேற்று காலை முதல் பிரார்த்தனை நடந்தது. அதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், ஆயர், போதகர்களிடம் ஆசி பெற்றனர். இரவு வரை, பிரார்த்தனை,
திருப்பலிகள் நடந்தன. மேலும், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர், வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்