Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அட்சய திரிதியை கனகதாரா யாகம்! மூன்று முடிச்சுக்குள் எத்தனையோ ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் பொன்னானது கடமை கண்ணானது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
02:04

* இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால், இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. கிடைக்கும் நேரத்தில் உங்கள்
கடமையை சரி வர செய்யுங்கள்.            
* மண்ணில் நட்ட விதை பயிராக வளரும் என்ற நம்பிக்கை இருப்பது போல, கடவுளையும் நம்பிக்கையுடன் வணங்கினால் எதிர்கால வாழ்வு நன்மையாக அமையும்.                   
* பிறரை வணங்குவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக, நம் ஆணவ எண்ணம் குறையும்.                  
* கருவறையில் கடவுளைக் காண்பதால்பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மையான பக்தி.                  
* சுயநலத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால், கடவுள் ஆயிரம் அடி விலகிச் சென்று விடுவார்.                  
* கிணற்றில் விழ ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால், அங்கிருந்து எழுந்து வர பல மணி நேரம் போராட வேண்டியிருக்கும். ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே.
* பாயும் நீரை ஓரிடத்தில் அணையில் தேக்கினால் விவசாயம் செய்யலாம். அது போல சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால்
கடவுளின் அருளைப் பெறலாம்.
* நமது வாழ்வை ஆக்கவழியில் பயன்படுத்தாமல், அழிவு வழியில் பயன்படுத்தினால் ஏற்படும் துன்பத்திற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார்.                  
* இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைக் காக்கும் ஒரே நண்பன் கடவுள்
மட்டுமே.                  
* சாஸ்திரத்தை படிப்பதால் பயனில்லை. அதைப் பின்பற்ற வேண்டும். வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டட வரைபடத்தில் யாரும் குடியிருக்க முடியாது.
* ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும். பக்தி மட்டும் நிலைக்கும்.             * புயலில் மரம் சாயும். கட்டடங்கள் இடிந்து போகும். ஆனால், புல் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்ளும். இந்தப்பணிவை புல்லிடம்
இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
* கரும்பின் சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையை எறிவது போல, நண்பர்களிடம்  உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு தீமையைத் தள்ளி
விடுங்கள்.               
* வரைபடம் இருப்பவனுக்கு வாகனப்பயணம் சுலபமாகும்.  தர்ம சாஸ்திரங்களின் உதவி இருந்தால் வாழ்க்கைப் பயணம் எளிதாகும்.         
* கடவுளின் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் பாவம் தொலையும். மனம் சுத்தமாகும். வலை பின்னும் சிலந்தி போல எங்கிருந்தாலும் மனதால் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.
* பிறர் மீதுள்ள குறைகளை பொருட்படுத்தாமல் அவரிடமுள்ள நற்குணங்களை மட்டும் காண முயல வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar