Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பைபிள் பொன்மொழிகள் கொடிமரம் முன்பு எந்த திசைநோக்கி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாலமனின் வாழ்க்கைப் பாடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
02:04

மன்னன் சாலமன் நீதிமான். ஒரு குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள், அது தன்னுடையது என வாதாடிய போது, வாளால் குழந்தையை இருகூறாகப் பிரித்து தருவதாக சொல்லி, உண்மைத்தாயிடம் சரியாக குழந்தையை ஒப்படைத்தவர். ஒரு சமயம் சாலமனின் தந்தை தாவீது, இஸ்ரவேலில் ஒரு ஆலயம் நிர்மாணிக்குமாறு கட்டளையிட்டார். அதை ஏற்ற சாலமன், சிறப்பாக கட்டி முடித்தார். அவரது சேவையை கண்டு மகிழ்ந்த ஆண்டவர், “சாலமனே! ஜெருசலேமில் நீ கட்டிய ஆலயத்தை ஆசிர்வதிக்கிறேன். உன் தந்தையைப் போல் நீயும் கடைசி வரை என் பாதையில் நடந்தால், உன் அரசாட்சி கடைசி வரை அழியாது. ஆனால் நீயோ, உனது  மக்களோ என்னைப் புறக்கணித்தால், உன் மாளிகையும்,  இஸ்ரவேல் நாடும் அழிந்து போகும்,” என்றார். காலம் உருண்டது. சாலமனுக்கு செல்வச்செருக்கு, பிறர் தன்னை புகழ்ந்ததால் ஏற்பட்ட மமதை என எல்லாமுமாகச் சேர்ந்து, மனதை மாற்றி விட்டது. கணக்கற்ற பெண்களை திருமணம் செய்தார். கடும் வரி விதித்து சுகபோகமாக வாழ்ந்தார். இதனால் சாலமனை மக்கள் வெறுத்தனர். இதையறிந்த பகைவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டைப்  பறித்தனர். தன் நாடு தன் கண்ணெதிரிலேயே துண்டு துண்டானது கண்டு உயிர் விட்டார் சாலமன். மக்கள் எப்படி வாழ வேண்டும் என மூவாயிரம் நீதி மொழிகளைச் சொன்ன சாலமன், அதில் ஒன்றைக்கூட   கடைப்பிடிக்காமல் தன் புகழை, ஒரு கறையுடன்தான் தக்க வைத்துக் கொண்டார். நாம் சாலமனின் நற்குணங்களை கடைபிடித்து, பிற்கால வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுளின்  கட்டளைக்கு கீழ்ப்படிந்து  அவரது விசுவாசமுள்ள ஊழியராகத் தொடர்வோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar