ருத்ரா என்ற சொல் ருத் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு அழுது கண்ணீர் விடுவது என்பது பொருள். அட்சம் என்றால் கண் என்று அர்த்தம். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களின் முப்புரங்களையும் தனது நெற்றிக்கண்ணால் சிவபெருமான் எரித்துவிட்டார். அதேசமயம் அவருடைய மனம் இளகி கண்களிலிருந்து நீர் முத்துமுத்தாக உதிர்ந்தது. அந்தக் கண்ணீரே ருத்ர அக்ஷம் ருத்ராக்ஷம் எனப் பெயர் பெற்றது.