மதுரை அருகேயுள்ள வாடிப்பட்டியில் வல்லப கணபதி கோயில் உள்ளது. இங்கு பூஜையின் போது திருமாங்கல்யம் குங்குமம், மஞ்சள் இவற்றை வைத்து வழிபட்டு, பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். விநாயகர், அம்பிகையிடமிருந்து தோன்றியதால் இவரை சக்தி அம்சமாகக் கருதி இவ்வாறு செய்கின்றனராம்.