பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
01:04
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராம செந்தூர வீர ஆஞ்சநேயர் கோவிலில், மகா கும்பாபிஷேகம், வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில், வேடங்கி நல்லூர் கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக ஸ்ரீராம செந்தூர வீர ஆஞ்சநேயர் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, வரும் 29ம் மாலை, விக்னேஸ்வர பூஜை, நவகிரஹ ஹோமத்துடன் துவங்குகிறது.மறுநாள், 30ம் தேதி, காலை, 8:15 மணிஅளவில் மகா
கும்பாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.