ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழா, ஏப்., 22ல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் துவங்கியது.விழாவின், ஐந்தாம் நாளான நேற்று காலை பல்லக்கிலும், மாலை ஹம்ச வாகனத்திலும் ராமானுஜர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக மதியம், 2:00 மணிக்கு ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.