உடுமலை: கோட்டமங்கலத்தில், பழமை வாய்ந்த வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில், உழவார பணி மேற்கொள்ளப்பட்டது. அறக்கட்டளை கவுரவ தலைவர் வக்கீல் முருகராஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கோவில் சுற்றுப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக ஆலோசகர் ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ராமு, ஜெகதீஷ் உட்பட பலர் பேசினர். பழமை வாய்ந்த கோவில்களை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களின் சிறப்புகள் குறித்து அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில், முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்.
பழமை வாய்ந்த கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து அத்தகவல்களை வெளியிட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.