பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
02:04
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், சித்திரை பிரம்மோற்சவத்திற்காக, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தேர் மற்றும் உற்சவர் உலா செல்லும் வாகனங்கள் பராமரிக்கப்படுகின்றன.
மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மே, 2ல் துவங்கி, 12 வரை, சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. உற்சவத்தை முன்னிட்டு, நாள்தோறும் காலை, இரவு, வெவ்வேறு வாகனங்களிலும், 9ம் தேதி, திருத்தேரிலும், சுவாமி வீதியுலா செல்வார்.
இதற்காக, கோவில் தேர் மற்றும் வாகனங்கள் மராமத்து பணிகள் செய்யப்படுகின்றன. சேஷ வாகனத்திற்கு புதிய வண்ணம் தீட்டியும், மற்றவை பராமரிக்கப்பட்டும் வருகிறது. திருத்தேரும்
பராமரிப்பு பணியில் உள்ளது.