வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழவைமுன்னிட்டு நேற்று முன் தினம் யாகசாலை பூஜைகள் துவங்கி நேற்று காலை நான்காம் காலபூஜைகள், பின் கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம்வந்த பின்னர் மூலஸ்தான கோபுரம் மீது அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.விநாயகர், வாலகுருநாதசுவாமி, சோனை, பாலம்மாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகளை சண்முகசுந்தரபட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். சுற்றுவட்டாரகிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.