பதிவு செய்த நாள்
04
மே
2017
01:05
அவிநாசி: கொங்கேழு சிவாலயங்களில் முதலாவதான, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று புஷ்ப விமானம், கைலாச வாகனங்களில், சுவாமி எழுந்தருளினார். விழாவில் முக்கிய நிகழ்வான, 63 நாயன்மார்களுக்கு, பஞ்ச மூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம் இன்று இரவு நடக்கிறது. முன்னதாக, இன்று காலை, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், நாயன்மார்கள் சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு வேத மந்திரங்கள், சிவபுராணம் பாராயணம் செய்தல், சிவகண பூதவாத்யம் இசைத்தல், சுவாமி திருவீதியுõ, நாதஸ்வர இன்னிசையுடன் நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அறுபத்து மூவர் விழா ஏற்பாடுகளை, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை யினர் செய்து வருகின்றனர்.