பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
குன்றத்தூர்: குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் தேரோட்டம், நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில், காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துஉள்ளது. நவ கிரகங்களில் ராகு தலமாக கருதப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும்
சித்திரை மாதம், பிரம்மோற்சவ விழா, 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழங்கம்.
கொடியேற்றம்இந்தாண்டு பிரம்மோற்சவ விழா, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து,
தினமும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். உற்சவம்ஏழாவது நாளான நேற்று, மகா ரத உற்சவம்
நடந்தது.இதில், காலை, 6:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர், 1:00
மணிக்கு வந்தடைந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை
வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் வசதிக்காக, ஆங்காங்கே நீர், மோர்,
இளநீர், அன்னதானம் வழங்கப்பட்டன. அசம்பாவிதங்கள்
நிகழாமல் இருக்க, குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.