பதிவு செய்த நாள்
09
மே
2017
11:05
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியில், கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலையில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து அருணாசலேஸ்வர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர்.இதில், கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பவுர்ணமியன்று, மற்ற மாதங்களை விட, கூடுதலான பக்தர்கள் கிரிவலம் வருவர்.நாளை, சித்ரா பவுர்ணமி என்பதால், ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்று அதிகாலை, 12:09 மணிக்கு துவங்கி, 11ம் தேதி, அதிகாலை, 3:04 மணி வரை பவுர்ணமி உள்ளது. ’இது, கிரிவலம் செல்ல உகந்த நேரம்’ என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.