பதிவு செய்த நாள்
11
மே
2017
02:05
மோகனூர்: நாகப்புற்று கருமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. மோகனூர், வள்ளியம்மன் கோவில் அருகே, பெரியார் நகரில், நாகப்புற்று கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடக்கிறது. இந்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், 7:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். அதையடுத்து, ஆற்றில் அம்மனுக்கு பூங்கரகம் பாலிக்கப்பட்டு, தீர்த்தக்குடங்களுடன், ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். காலை, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் செய்தனர்.