பதிவு செய்த நாள்
10
நவ
2011
04:11
2011ம் ஆண்டில் "எண் 1ஐ அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11, 1-11-11ஆகிய தேதிகள் முடிந்து விட்டன. இன்று 11-11-11 ம் தேதி ஆகும். இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப்படுகின்றன. இந்த தேதிகளில் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டில் அனைவரிடமும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாட்களில் பிறக்கும் குழந்தைகள், ராசியானவர்கள் என்ற கருத்தும் வெளிநாடுகளில் நிலவுகிறது. 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. நீங்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களோடு, வயதைக் கூட்டினால் 111 வரும். அதே போல இந்த தேதிகளும் வருகின்றன. ஒன்றை அடிப்படையாக கொண்ட இந்த ஆண்டு அதிஷ்டமானது என்ற எஸ்.எம்.எஸ்., களும் வலம் வருகின்றன. இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தான், 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வந்தன. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம். 11-11-1111 என்ற ஆண்டு, 900 ஆண்டுகளுக்கு முன் வந்தது. இந்த நாள் அதிர்ஷ்ட நாளாக கொண்டாடப்பட்டது. தற்போது 11-11-11 வெள்ளிக் கிழமையில் வருகிறது. இது மேலும் ராசியானதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள பலர் திட்டமிட்டுள்ளனர். இந்த நாளின் 11 மணி 11 நிமிடம் 11 விநாடியில் பிறக்கும் குழந்தை, அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.