ஆர்.எஸ்.மங்கலம் திருவெற்றியூருக்கு பஸ் இயக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 12:05
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து திருவெற்றியூருக்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நேரடியாக திருவெற்றியூருக்கு பஸ் வசதி இல்லாததால் 17 கி.மீ., தொலைவில் உள்ள திருவாடானை சென்று, அங்கிருந்து வேறு பஸ் மூலம் 12 கி.மீ., தொலைவில் உள்ள திருவெற்றியூருக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நேரடி பஸ்வசதி இல்லாததால் கூடுதலாக 11 கி.மீ., சுற்றி திருவெற்றியூர் செல்ல வேண்டியுள்ளது.பக்தர்களுக்கு பணவிரயம் மற்றும் காலவிரயம் ஏற்பட்டு வருகிறது. நேரடி பஸ் விட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.