திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கூடுதல் கேமராக்கள் பொருத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 12:05
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யபட்டுள்ளது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷம் மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.கோயிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து செயின் பறிப்பது போன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் கோயிலின் வெளிபிரகாரத்தில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இக் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 29ல் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோயில் உட்பிரகாரம் உட்பட பல இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.