சேத்தியாத்தோப்பு ஆஞ்சநேயர் கோவிலில் மழை வேண்டி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 12:05
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் வறட்சியிலிருந்து மக்களை காத்திட மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக மூலவர் வீரசக்தி ஆஞ்சநேயருக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், திரவியப்பொடி, விபூதி உள்ளிட்ட 16 வகைதிரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதிஹோமம், ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம், மழை வேண்டி வர்ண பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பின்னர்ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து சிறப்புதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.