பதிவு செய்த நாள்
22
மே
2017
12:05
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி சுவாமிக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.
ஜுன் 7ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கும் விழாவில் பால்குடம், பூக்குழி, சுவாமிக்கு பாலாபிஷேகம், இரண்டாம் நாள் பட்டு பல்லக்கு, மூன்றாம் நாள் பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா நடக்கும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பத்ர காளிம்மன் கோயில் உற்சவ விழா திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கிரிவல ரோட்டிலுள்ள பத்ர காளிம்மன் கோயில் ஆண்டு உற்சவ விழாவில் முதல்நாள் பக்தர்கள் பொங்கல் øÁத்தும், தீச்சட்டி எடுத்தனர். இரண்டாம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவும், மூன்றாம் நாள் முளைப்பாரி விழாவும், மறு பூஜையும் நடந்தது. நிர்வாகிகள் சுடலைமணி, பாண்டித்துரை, காசிராஜன், முருகன், சோலையப்பன், காமராஜ், வேலுச்சாமி விழா ஏற்பாடுகள் செய்தனர்.