பதிவு செய்த நாள்
23
மே
2017
01:05
திருச்சி: திருவாரூர் மாவட்டம், சேங்காலிபுரம் பரிமள ரங்கநாத சுவாமி கோவிலில், திருப்பணி துவங்கவுள்ளது. இந்த புண்ணிய கைங்கர்யத்தில் பங்கேற்க, நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
ஆறாவது விரல்: இது குறித்து, திருப்பணியை முன்னின்று நடத்தவுள்ள பிரம்மவித்யா சபாவினர் கூறியதாவது: ங்காலிபுரம் மிகப்பழமை வாய்ந்த புண்ணிய ஷேத்திரம். இங்குள்ள பரிமள ரங்கநாத சுவாமி கோவில் பழமையானது. இங்கு பள்ளி கொண்டுள்ள பரிமள ரங்கநாதரின் வலது கால்களில், ஆறு விரல்கள் இருப்பதுஅபூர்வமென்றும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் முயற்சியில், இக்கோவிலில், 2005ல், மகா சம்ப்ரோக் ஷ்ணம் நடந்தது. இந்து கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆகம நெறிகளுக்கு உட்பட்டு, தற்போது இங்கு திருப்பணிகள் துவங்க உள்ளன.
கைங்கர்யம் : இந்த புண்ணிய கைங்கர்யத்தில், தங்களின் பங்களிப்பை வழங்க விரும்பும் வெளியூர் பக்தர்கள், பிரம்மவித்யா சபா, சேங்காலிபுரம் என்ற பெயரில், காசோலைகள் மற்றும் வரைவோலைகளை, எஸ்.ஆர்.சுப்ரமணியன், 41 - நடு அக்ரஹாரம், சேங்காலிபுரம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். இல்லையெனில், சேங்காலிபுரம் இந்தியன் பேங்க் SB Ac. No. 648 331 6125, IFSC Code- IDIB 000S104 என்ற கணக்கிற்கோ, சிட்டி யூனியன் பேங்க், குடவாசல் கிளை SB/Ac.No. 500 1010 1123 8747, IFSC Code- CIUB 000 0013 என்ற கணக்கிற்கோ அனுப்பலாம். மற்ற விபரங்களை, 94440 56737 மற்றும் 94441 43331 என்ற மொபைல் போன் எண்களிலும், தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.