பதிவு செய்த நாள்
26
மே
2017
01:05
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று, காலை. 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.