பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
01:06
நரிக்குடி, நரிக்குடி அருகே உலக்குடி ஸ்ரீ வாழவந்தம்மான் கோயிலில் ஸ்ரீ வாழவந்தம்மன், ஸ்ரீசப்த கன்னிகள், ஸ்ரீ பொங்காத்த கருப்பர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முன்னோடியான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளில் அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ஹோமம், மஹா பூர்ணாகுதி, இரண்டாம் நாளில் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள், மூன்றாம் நாளில் இரண்டாம் கால யாக பூஜை, அடுத்த நாளில் மூன்றாம் கால யாக பூஜை, நேற்று நான்காம் கால யாக பூஜை, கோ பூஜையுடன் கும்பாபிஷேகம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது.