பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
01:06
குளித்தலை : குளித்தலையில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை, நீலமேகபெருமாள் கோவில், வைகாசி விசாகத் திருத்தேர் விழா, கடந்த, மே, 30ல் துவங்கியது. நாள்தோறும் இரவில், பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழாம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த, 5ல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பல்லாக்கு வெண்ணெய் தாழியில் சுவாமி திருவீதி உலா வந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று அதிகாலை, 5:30 மணியளவில், ரதபிரதிஷ்டை ரதாரோகணத்தை தொடந்து, காலை, 9:30 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக, தேர் இழுக்கப்பட்டு, தேர் நிலைக்கு வந்தது. மாலை, சுவாமி தீர்த்தவாரியும், இரவு தேர்கால் மண்டகபடி பூஜையும் நடந்தது. தொடர்ந்து திருத்தேர் திருவிழா நாளை மறுநாள், விடையார்த்தி திருமஞ்சனத்துடன் முடிவடைகிறது.