Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மவுனகுரு சுவாமி கோயிலில் மூல ... கால தோஷ நிவர்த்தி ஹோமம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
02:06

திருத்தணி: திரவுபதியம்மன் உட்பட மூன்று அம்மன் கோவில்களில், நேற்று நடந்த தீமிதி விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தினமும் காலை, 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், மாலையில் உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வந்தது.

நேற்று, காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 900 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலையில் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதே போல், திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் அருந்ததி காலனி, சீனிவாசபுரம் அருந்ததி காலனி ஆகிய இடங்களில் உள்ள மாத்தம்மன் கோவிலில், நேற்று, தீமிதி திருவிழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar